சனி, 7 பிப்ரவரி, 2009

டென்ஷன் வேண்டாம்... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

இன்றைய அவசர உலகில், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு மன இறுக்கம் ஒரு வகையில் காரணமாக அமைந்து விடுகிறது. கவலைகளை ஒதுக்கி விட்டு ரிலாக்ஸாக இருப்பதே இதற்கு சரியான மருந்து.

வேலை செய்யும் இடத்தில் உடலை ரிலாக்ஸ் செய்வது, பணியின் போது உள்ள சோர்வைப் போக்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி, 'டென்ஷனை' மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டாம். ரிலாக்ஸாக இருக்க உங்களுக்கு சில டிப்ஸ்...

அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்காமல், மன ஓட்டத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அவ்வப்போது கண்களை சிறிது நேரம் மூடியபடி உட்கார்ந்திருக்கலாம். ஒருவேளை தூக்கம் வந்தால்...? அப்படியே சிறிது நேரம் உறங்குவதும் நல்லது தான்.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையில் இருக்கையில் இருந்து எழுந்து அருகில் உள்ளவர்களிடம் கொஞ்சநேரம் பேசி வரலாம். கையில் ஏதேனும் நாளிதழ், வார- மாத இதழ்கள் இருந்தால், சில நிமிடங்கள் அதைப் புரட்டி அதில் கவனம் செலுத்தலாம்.

பணி புரியும் இருக்கையில் கை- கால்களை கொஞ்சம் தளர்த்தி, சுவாசப் பயிற்சி செய்யலாம். சுவாசத்தை உள்நோக்கி இழுத்து, சில வினாடிகல் உள்ளேயே அடங்கி பின்னர் மெதுவாக சுவாசத்தை வெளியிட வேண்டும்.

புருவத்தையும், கண்களையும் மேலும் கீழுமாக, வலது- இடது பக்கமாக திருப்பி, கண்களை சிறிது நேரம் உருட்டலாம். இதே முறையில் கை, கால்களையும் அசைத்து, சுழற்றி புத்துணர்வு பெறலாம்.

தேநீர் அருந்தும் நேரங்களில் தனியாக கேண்டீன், உணவு விடுதிகளுக்குச் செல்லாமல் நண்பர்களுடன் அளவளாவியபடி சென்று வந்தால், சோர்வு குறைந்து தெம்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் பணி புரியும் போது வீட்டுச் சிந்தனைகள், வேறு கவலைகளை எண்ணிக் கொண்டிருக்காமல், அலுவலக வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்


ரிலாக்ஸ் ப்ளீஸ்! ரிலாக்ஸ் ப்ளீஸ்! ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin