செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

செந்தூர் எக்ஸ்பிரஸ்-வாரம் 5 நாள் இயங்கும்

திருச்செந்தூர்: திருச்செந்தூர்-சென்னை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.

இந்த ரயில் சேவையை லாலு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,

திருச்செந்தூர் தைப்பூச திருநாளுக்கு பெயர் பெற்றதாகும். இந்த நல்ல நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் வேண்டுகோளை ஏற்று இந்த ரயிலுக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்த நகரங்களோடு ஸ்ரீவைகுண்டம், குரும்பூர் ஆகிய ஊர்களிலும் இந்த ரயில் நின்று செல்லும். தற்போது இந்த ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும். பின்னர் அது தினமும் ஓட வகை செய்யப்படும். நான் பதவிக்கு வந்தபின் தமிழகத்துக்கு நிறைய ரயில்கள் விட்டுள்ளேன் என்றார் லாலு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin