திங்கள், 7 செப்டம்பர், 2009

ராகுல் சுற்றுப்பயணம்: விஜய் காங்கிரசில் இணைகிறார்?

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் வரும் 8 முதல் 10ராகுல் சுற்றுப்பயணம்: விஜய் காங்கிரசில் இணைகிறார்?அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தில் வரும் 8 முதல் 10ஆம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.9ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய இருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உத்தரவின் பேரில் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதன்மை இயக்கமாக மாற்றுவதற்கும், தமிழக இளைஞர் காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் ராகுல் காந்தி வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வரும் 8ஆம் தேதியன்று திருநெல்வேலி, நாகர்கோயிலில் இளைஞர்களைச் சந்திக்கும் ராகுல்காந்தி, மாலையில் மதுரை இளம் எஸ்.சி. எஸ்.டி. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

9ஆம் தேதி தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து விட்டு, விழுப்புரத்தில் இளைஞர்களைச் சந்திக்கவுள்ளதாக கே.வீ. தங்கபாலு கூறினார்.

அன்றைய தினம் மாலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த பின், மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 5 மணிக்கு சென்னையில் இளைஞர்களுடன் சந்தித்து உரையாற்றுகிறார்.

மாலை 6.30 மணியளவில் சென்னை பத்திரிகை நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் சந்தித்து பேசுகிறார்.

10ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை ராகுல் சந்திக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி, கோவையிலும் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக தங்கபாலு கூறினார்.

ராகுல் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருவதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீவிர வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விஜய் காங்கிரசில் இணைகிறார்:

நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9ஆம் தேதியன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெரிய வந்துள்ளது.
1, அரசியல், இந்தியா, உலகம், கட்டுரை, கட்டுரைகள், சினிமா, செய்திகள், தமிழர் களம், தமிழ்நாடு இல் பதிவிடப்பட்டது
« முகாம் குறித்து பேசிய ஐ.நா. அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற சிறிலங்கா உத்தரவுஇன்று புகழாரம் பாடுபவர்கள் நாளை அரசியல் அநாதைகளாகவும் அரசியல் கோமாளிகளாகவுமே மாறப் போகின்றனர் – ஜே.வி.பி. »ஆம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.9ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைய இருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உத்தரவின் பேரில் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை முதன்மை இயக்கமாக மாற்றுவதற்கும், தமிழக இளைஞர் காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் ராகுல் காந்தி வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வரும் 8ஆம் தேதியன்று திருநெல்வேலி, நாகர்கோயிலில் இளைஞர்களைச் சந்திக்கும் ராகுல்காந்தி, மாலையில் மதுரை இளம் எஸ்.சி. எஸ்.டி. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

9ஆம் தேதி தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து விட்டு, விழுப்புரத்தில் இளைஞர்களைச் சந்திக்கவுள்ளதாக கே.வீ. தங்கபாலு கூறினார்.

அன்றைய தினம் மாலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்த பின், மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மாலை 5 மணிக்கு சென்னையில் இளைஞர்களுடன் சந்தித்து உரையாற்றுகிறார்.

மாலை 6.30 மணியளவில் சென்னை பத்திரிகை நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் சந்தித்து பேசுகிறார்.

10ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை ராகுல் சந்திக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணகிரி, கோவையிலும் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பதாக தங்கபாலு கூறினார்.

ராகுல் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருவதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீவிர வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விஜய் காங்கிரசில் இணைகிறார்:

நடிகர் விஜய் தன் ரசிகர்களுடன் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9ஆம் தேதியன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin