சனி, 15 ஆகஸ்ட், 2009

திருநெல்வேலியில் சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்


திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திரதினவிழா பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் நடந்தது. மாவட்ட ஆடசித் தலைவர் மு.ஜெயராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. சுதந்திர தினவிழா, இறுதியில் நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.



விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமணி சரஸ்வதி, டி.ஐ.ஜி, கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ராகர்க், நெல்லை போலீஸ் கமிஷனர் குணசீலன், துணைத் கமிஷனர் அவினாஷ்குமார், நெல்லை மாநகராட்சி மேயர், ஏ.எல்.சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் மோகன், டி.ஆர்.ஏ., ரவீந்திரன், ஏ.டி.ஆர்.ஏ., நரேஷ்கான் உட்பட ஏராளமான அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin