புதன், 15 ஜூலை, 2009

10 பேருக்கு அறிவியலறிஞர் விருதுகள்


தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 10 வல்லுநர்கள், தமிழக அறிவியலறிஞர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் ச. வின்சென்ட் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (Tamilnadu State Council for Science and Technology) தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். இதன் நோக்கம் நமது மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இதன் பயன்களை மக்களுக்கு சென்றடையச் செய்வது முதலியன ஆகும்.

இதற்காக பல்வேறு அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களைத் தமிழக அரசு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் ஒன்று “தமிழக அறிவியலறிஞர் விருது” வழங்கும் திட்டம்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து, தமது துறையில் (Discipline) சிறந்து விளங்கும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் கீழ்காணும் துறைகளில் வழங்கப்படுகிறது.

1) வேளாண்மையியல்
2) உயிரியல்
3) வேதியியல்
4) சுற்றுச் சூழலியல்
5) பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
6) கணிதவியல்
7) மருத்துவம்
8) இயற்பியல்
9) கால்நடை அறிவியல்
10) சமூகவியல்.

இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி 2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் சாதனையாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வேளாண்மையியல் - முனைவர் பி. மீனா

உதவிப் பேராசிரியர்,
தென்னை ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
ஆழியார்நகர் 642 101.

2. உயிரியல் - முனைவர் ஏ.சேட் சாகுல் அமீது

ரீடர், விலங்கியல் துறை,
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி,
மேல்விசாரம் 632 509.

3. வேதியியல் - முனைவர் ஆ. சாமிநாதன்

பேராசிரியர், வேதியியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் 608 002.

4. சுற்றுச் சூழலியல் - முனைவர் சு பாபு ராசேந்திரன்

ரீடர்,
சுற்றுச் சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி 620 024.

5. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - முனைவர் சு. நாராயணசாமி

பேராசிரியர்,
உற்பத்தி நுட்பவியல் துறை,
தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (NIT),
திருச்சி 620 015.

6. கணிதவியல் - முனைவர் ஆ லெலிஸ் திவாகர்

ரீடர், கணிதவியல் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி,
மதுரை 625 514.

7. மருத்துவம் - முனைவர் பி. ராசேந்திரன்

பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,
Dr. ALMPGIBMS,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 600 113.

8. மருத்துவம் - முனைவர் எஸ். செயசந்திரன்

பேராசிரியர், பல் மருத்துவம் மற்றும் கதிரியல் துறை,
தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி,
சென்னை 600 003

9. இயற்பியல் - முனைவர் C.K. மகாதேவன்

ரீடர், இயற்பியல் துறை,
S.T. இந்து கல்லூரி,
நாகர்கோவில் 629 002.

10 . கால்நடை அறிவியல் - முனைவர் ஆ திருநாவுக்கரசு

பேராசிரியர், புள்ளியில் மற்றும் கணிப்பொறியியல் துறை,
சென்னை கால்நடைக் கல்லூரி,
சென்னை 600 007.

2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் மேற்கண்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு கொடுப்பதுடன் இவர்களது சாதனைகள் பற்றிய விளக்கக் குறிப்பும் (Citation) வழங்கப்படும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin