திங்கள், 15 ஜூன், 2009

ஜூலை 3 ரயில்வே பட்ஜெட்; 6ஆம் தேதி பொது பட்ஜெட்

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான முழு அளவிலான ரயில்வே பட்ஜெட் அடுத்தமாதம் 3ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படுகிறது.

பொது பட்ஜெட் ஜூலை 6ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டை அத்துறைக்கான அமைச்சர் மம்தா பானர்ஜியும், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தாக்கல் செய்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட் தாக்கல் செய்வதற்காக அடுத்தமாதம் நாடாளுமன்றம் கூடும் தேதியை குடியரசுத் தலைவர் முறைப்படி விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin