திங்கள், 23 மார்ச், 2009

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை நடத்தும் மத நல்லிணக்க மாநாடு

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை ( www.tmcaonline.com ) நடத்தும் மத நல்லிணக்க மாநாடு 03 ஏப்ரல் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹவல்லி காத்ஸியா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மேதகு இந்திய தூதுவர் அஜய் மல்ஹோத்ரா பங்கேற்கிறார்.

தமிழகத்திலிருந்து சொல்லின் செல்வர் நெல்லை கண்ணன், புதுச்சேரி போப்ஜான்பால் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பால்ராஜ்குமார், மலைக்கோட்டை தருமையாதீனம் ஸ்ரீ மௌனமடம் ஸ்ரீமத் மௌன குமாரசுவாமித் தம்பிரான், கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதிர் பெண்கள் கல்லூரி முதல்வர் சுமையா தாவூத், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கின்றனர்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.

பள்ளிக்குழந்தைகள் தேசியப் பாடல்களைப் பாடுவர். இந்நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.இந்நிகழ்ச்சிக்கு லக்கி பிரஸ், டிவிஎஸ் கார்கோ & டிராவல்ஸ், யாஸ்ரா புட் கம்பெனி, தமிழ்நாடு பெஸ்ட் சர்வீஸ், சிட்டி கிளினிக் & மருந்தகம் ஆகிய நிறுவனங்கள் அனுசரனை வழங்கி உள்ளன.

தனிச்சிறப்பு மிக்க தமிழ்ச் சமுதாயத்தினர் திரண்டு வருகை தர அழைக்கிறது தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை.

மேலதிக விபரங்களுக்கு : 0097649800 / 0094420919

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin