திங்கள், 23 மார்ச், 2009

ஸ்ரீவை கே ஜி எஸ் கல்லுரியில் கருத்தரங்கம் நடந்தது

ஸ்ரீவை கல்லுரியில் 1857 ஆம் ஆண்டு புரட்சி 150 வது ஆண்டு நினைவாக கருத்தரங்கம் நடந்தது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகம் என்னும் முதல் இந்தியா சுதந்திரப் போர் நடைபெற்ற தன் 150 ஆம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், ஸ்ரீவை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைகல்லுரின் வரலாறு மற்றும் சுற்றுலா இயல் துறையும், புதுடெல்லி இந்திய வரலாற்று ஆராய்சி மையமும் இனைத்து நடத்திய கருத்தரங்கம் கல்லுரியில் நடந்தது.

கருத்தரங்கில் கல்லுர்ரி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்து பேசினர். அவர் பேசுகையில் சுதந்திர போரில் உயிர் நீத்த தியாகிகள் செம்மல்களின் வரலாற்றை நின்னயுப்படுத்தி, அதனை எதிர்வரும் இளைய தலைமுறைக்கு கொண்டு வருவதே இந்த கருத்தரங்கின் நோக்கம் என விளக்கினர். கருத்தரங்கை திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவர் பாரதி துவங்கி வைத்தார்.

மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் வரலாற்று துறைப் பேராசிரியர் சதாசிவம் வாழ்த்திப் பேசினார்.சென்னை மீனாட்சி கல்லுரரி பேராசிரியர் பார்வதி செண்பகதேவி, தூத்துக்குடி வ உ சி கல்லுரரி பேராசிரியர் ஆகியோர் பேசினார்.

நிறை விழாவில் திருநெல்வேலி ம தி தா இந்துகல்லுரி பேராசிரியை பத்மஜா அனந்தராமன் கலந்துக் கொண்டு சான்றிதழ்கள் வழங்கினர் கருத்தரங்கில் தென் பொருனக் கரையில் தேசபக்த மாமணிகள் என்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய வரலாற்று நூல் லட்சுமிகாந்த் பாரதியால் வெளிடப்பட்டது நூலை கல்லுரி முதல்வர் சங்கரநாராயணன் பெற்றுக்கொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பலர் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin