இந்த ஆண்டு முதல் சர்வ தேச பாஸ்போர்ட் வைத்திருக்கும் முஸ்லிம்கள் தான் சவூதி அரேபிய நாட்டிற்கு புனித ஹஜ் பயணம் மேற் கொள்ள முடியும் என்று அந்த நாடு எடுத்த முடிவை ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான இ.அஹமது சவூதி நாட்டுடன் மேற் கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது
தற்போது சர்வதேச பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள் குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காகவே, ஹயாத்திரை பாஸ் போர்ட் என்ற தற்காலிக பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு சவூதி அரேபியா சென்று வருகிறார்கள்.
இந்த பாஸ்போர்ட்டு களை வாங்குவதில் நடை முறைகள் எளிதாக உள்ளன. இந்த யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கிராமப்புறத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். அது இல்லாத வர்கள் சவூதி அரேபியாவுக்குள் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று புதிய செயல் திட் டத்தை சவூதி அரேபியா செயல்படுத்த அறிவித்துள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் சர்வதேச பாஸ் போர்ட்டுகளை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களும், காலதாமதங்களும் ஏற்படுகின்றன.
குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சர்வதேச பாஸ்போர்ட்டுகளை பெறுவது மிகவும் சிரமமான காரியமாகும்.
இதன் காரணமாக, இந்தப் பிரச்சினை தீர்ப்பதற்காக மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் இ. அஹமது சவூதி அரேபியா சென்று அங்கு ஹஜ் பய ணத்திற்கான துணை அமைச்சர் ஹாத்தம்காதியை சந்தித்து பேசினார். புதிய திட்டப்படி சர்வதேச பாஸ்போர்ட்டுகளை பெற்று சவூதி அரேபியாவுக்கு செல்வதில் உள்ள பல்வேறு இடர்பாடு களை இ.அஹமது சவூதி அமைச்சருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
எனவே, இந்த திட்டத்தை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இ.அஹமதுவின் கோரிக்கைக்கு பதில் அளித்த சவூதி துணை அமைச்சர் ஹாத்தம்காதி இந்திய அரசின் கோரிக்கையை மிகவும் கவனமாக பரிசீலிப்போம் என்று கூறினார்.
தற்போது அவர் இ.அஹமது கோரிக்கையை ஏற்பதாகவும், சர்வதேச பாஸ்போர்ட் வேண்டும் என்ற திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் நிறைவேற்றுவோம் என்றும் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது புது டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:நான் கடந்த வாரம் சவூதி அரேபிய ஹஜ் துணையமைச்சர் ஹாத்தம் காதியை சந்தித்தபோது, ஹஜ் பயணத்திற்கான டிஜிட்டல் அல்லது இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் உடனடி ஆயத்த யாத்ரிகைகள் பாஸ்போர்ட்களை வழக்கம் போல் இந்த ஆண்டும் ஏற்றுக் கொள்ள வேண் டும் என்றும், அடுத்த ஆண்டு முதல் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்ப வர்களை மட்டும் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு சார்பில் நான் விடுத்த கோரிக்கையை சவூதி அரசு தற்போது ஏற்றுள்ளது.இந்த ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை துணையுடன் மத்திய ஹஜ் கமிட்டி டிஜிட்டல் பாஸ்போர்ட்களை தயார் செய்து ஹஜ் பயணிகளுக்கு வழங்கும்.
இந்த டிஜிட்டல் அல்லது இயந்திரங்கள் மூலம் தயாராகும் தற்காலிக யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் இந்த ஆண்டு சவூதி அரேபிய அரசு ஏற்றுக் கொள்ளும். சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தான் புனித ஹஜ் மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது அறிவித்தார்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது மிகுந்த அக்கரை யோடு சவூதி அரேபிய சென்று மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றிருப் பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக