சமூக சேவைக்காக காவல் துறையினருக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஆறு பதக்கங்களில் நான்கினை நெல்லை மாவட்ட போலீசார்கள் தட்டி சென்றனர்.
தமிழக அரசு ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வருகிறது.
இந்தாண்டு சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றிய நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் குணசீலன், நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், நெல்லை மாவட்ட தனிப்படையை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சாகுல் ஹமீது ஆகியோருக்கு தமிழக முதல்வரின் சமூக சேவைக்கான காவல் துறை சிறப்பு பணி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கம் இந்த ஆண்டு மொத்தமே 6 பேருக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. அதில் நான்கு பதக்கங்களை நெல்லை மாவட்டம் போலீசார் அள்ளி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக