குவைத்தின் அல்ஜகரா நகரில் திருமண வீட்டில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில், 36 பேர் உடல் கருகி பலியானார்கள். இந்த கோர சம்பவத்தால், திருமண நிகழ்ச்சியில் சோகம் நிழலாடியது.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ளது அல்ஜகரா நகரம். இங்கு திருமண விழா ஒன்று நடந்தது.
குவைத்தில் திருமண விழா விருந்து நிகழ்ச்சிகள் பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் நடைபெறும். இதில் பெண்களுக்கு நடந்த நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது பந்தலில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. அப்போது, பந்தலுக்கு உள்ளே சிக்கிக்கொண்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 36 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 60 பேர் காயம் அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக