திங்கள், 6 ஜூலை, 2009

சவூதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை தூத்துக்குடி கொண்டு வரக் கோரிக்கை


சவூதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த பெண், அமைச்சர் கீதா ஜீவனிடம் சனிக்கிழமை மனுக் கொடுத்தார்.

தூத்துக்குடி சகாயபுரத்தைச் சேர்ந்த பெஞ்சமின் மகன் கிஷோர் (31). இவரது மனைவி ஜெனிலா (28). இவர்களுக்கு சச்சின் (4) என்ற ஒரு மகன் உள்ளார்.

கிஷோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்குள்ள சிபேல்நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அங்கிருந்து கடந்த 30-ம் தேதி கிஷோர் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துப் பேசினாராம். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறினாராம்.

சில மணி நேரம் கழித்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் ஜெனிலாவுக்கு போன் செய்து, கிஷோர் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கிஷோர் உடலை இங்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் ஆகியோரை ஜெனிலா சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும், ஆட்சியரும் உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin