வியாழன், 16 ஜூலை, 2009

சீனா : ஜிகாத்க்கு அழைப்பு விடுத்த 3 பேர் சுட்டுக்கொலை

சீனாவின் உரும்கி நகரில் புனிதபோருக்கு அழைப்பு விடுத்த 3 இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சீனாவின் உரும்கி நகரில் அண்மையில் , அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் , சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்து 180 க்கும் அதிகமானோர் பலியாயினர்.

இந்த மோதலைத் தொடர்ந்து அங்கு மசூதிகளில் நடத்தப்படும் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் அப்போது மேற்கொள்ளப்படும் மத பிரசங்கத்திற்கு அரசு தடைவிதித்தது.

இதனிடையே உரும்கி நகரில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல் - காய்தா இயக்கம் , சீனாவுக்கு எதிராக புனிதப் போர் ( ஜிகாத் ) அறிவித்தது.

இந்நிலையில் , உரும்கி நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று சுமார் 150 க்கும் அதிகமானோர் பிரார்த்தனைக்காக திரண்டிருந்தபோது , அந்த கூட்டத்திலிருந்த மூன்று பேர், அம்மசூதியின் இமாம் கையிலிருந்து மைக்ரோ போனை பிடுங்க முயற்சித்தனர்.

அதனைத் தொடர்ந்து பச்சை நிற பதாகையை தூக்கி பிடித்தபடியே " ஜிகாத் " என்று முழக்கம் எழுப்பியவாறு, இதர இஸ்லாமியர்களையும் தங்களை பின்பற்றும்படி அழைப்பு விடுத்தனர்.

இதனால் பதற்றமடைந்த அந்த மசூதியின் இமாம் , பிரார்த்தனை முடிவுற்றதாக அறிவித்துவிட்டு , அங்கிருப்பவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

இதனால் கூச்சல் குழப்பம் உருவாகியது.இதனையடுத்து மசூதிக்கு வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் , உள்ளே நுழைந்தனர்.

அப்போது குழப்பம் ஏற்படுத்திய மூவரில் இரண்டுபேர் தாங்கள் வைத்திருந்த நீண்ட கத்தியை எடுத்து, அங்கிருப்பவர்களை தங்களுடன் வருமாறு மிரட்டினர்.அத்துடன் உள்ளே நுழைந்த போலீசார் ஒருவரையும் பிடித்து தாக்கினர்.

இதனையடுத்து அம்மூவரையும் சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர்.ஆனால் அதற்கு பலனில்லாமல் போகவே அம்மூவரையும் நோக்கி போலீசார் சுட்டனர்.

இதில் இரண்டுபேர் உயிரிழந்தனர் ; ஒருவர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin