திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியாய் இருந்து 15வது மக்களவை பொது தேர்தலுக்கு தொகுதி மறு சீராய்வின் படி திருச்செந்தூர் பெயர் மாற்றம் ஆகி முத்து நகரான தூத்துக்குடி தொகுதியாக பரிணாமம் பெற்றுள்ளது.
தனி மாவட்டம், தனி மாநகராட்சி, தனி பாராளுமன்ற தொகுதி என்று இம்மண்ணின் மண்வாசம் பெரிதாக வீசத் தொடங்கியுள்ளது.வறண்ட பூமியாக வறுமையோடு காலம் தள்ளிய இப்பகுதி தனி மாவட்டமாக்கப்பட்ட பின் பணமழை பொழிய தொடங்கி எங்கும் அமைதியாக உழைப்பை...உயர்வை...நோக்கி இம்மாவட்டம் தனி பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளது.
இத்தொகுதியின் முதல் எம்பியாக வருவதற்கு அனைத்து கட்சியிலும் ஆளாளுக்கு முட்டி மோதி வருகின்றனர்.
கடந்த தேர்தல் மற்றும் தொகுதி குறித்த அறிமுகம்...இப்பாராளுமன்ற தொகுதியில் விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டபிடாரம் (தனி) கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இதில் 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், 2 திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9,39,711 ஆகும். இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 79 ஆயிரத்து பெண் வாக்காளர்களும் உள்ளனர்.காங்கிரஸ் கட்சி 1962, 77, 80,84, 89, 91, 96 ஆகிய 7 முறையும், அதிமுக 98, 99 ஆகிய இரண்டு முறையும், சுதந்திரா கட்சி 1967லிலும், சுயேட்சை 1957லிலும் வென்றுள்ளன.1971ம் ஆண்டு வெற்றி பெற்ற திமுக அதன் பின்னர் 33 ஆண்டுகளுக்குபின் 2004ல் இத்தொகுதியில் வெற்றி பெற்றது.
தென்தமிழகத்தின்காங்கிரஸ் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.கடந்த தேர்தலில் திமுக-அதிமுக ஆகிய இரு மாநில கட்சிகளும் நேருக்கு நேர் மோதிய தொகுதி இது.வெங்கடேச பண்ணையார் அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் செய்யப்பட்டதால் நாடார் சமூக மக்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பை திமுக தனக்கு சாதமாக்கி அவரது மனைவி ராதிகா செல்வியை வேட்பாளராக்கி களம் இறக்கியது.ஒரே சமூகத்தை சேர்ந்த இரண்டு பேரும் களம் கண்டதில் அதிமுக வேட்பாளர் தாமோதரன், ராதிகா செல்வியிடம் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதற்கு பின் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக திருச்செந்தூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள் (திருச்செந்தூர்)
1957 - துரைப்பாண்டியன் (சுயே)
1962 - கிருஷ்ணம்மச்சாரி (காங்)
1967 - சந்தோசம் (சுதந்திரா கட்சி)
1971 - சிவசாமி (திமுக)
1977 - கே.டி. கோசல்ராம் (காங்)
1989 - தனுஷ்கோடி ஆதித்தன் (காங்)
1998 - ராமராஜன் (அதிமுக)
2004 - ராதிகா செல்வி (திமுக)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக