
நிலவை ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை 'சந்திராயன்-1' திட்ட இயக்குநர் எம்.அண்ணாதுரை பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
எனினும், தொழில்நுட்ப ரீதியாக சந்திராயன் விண்கலம் 100 சதவீதம் முழுமையாக செயல்பட்டுள்ளது என்றும், தனது பணிகளில் 90 முதல் 95 சதவீதம் அறிவியல்பூர்வமாக பூர்த்தி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2008 அக்டோபர் 22ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலத்தின் பணிக்காலம் 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக அதன் பணி முடிவடைந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக